கள்ளக்காதலனுடன் ரூம் போட்ட பெண் போலீஸ்! வீட்டுக்குள் நுழைந்த கணவன்! வைரல் வீடியோ! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் குஷிநகர் அருகே பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அம்மாநில காவல்துறையில் பெண் காவலராக பணியாற்றும் பெண், தனது கணவனை ஏமாற்றிவிட்டு மனைவி வேறொரு ஆணுடன் வீட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கணவன் இருவரையும் தாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.

சம்பவத்தில் ஈடுபட்ட மனைவியும், அந்த ஆணும் காவல் துறையிலேயே காவலராக உள்ளவர்கள். கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்ததால், அவர்களின் பணிநேரம் மாறுபட்டிருந்தது.

சம்பவம் நடந்த நாள் காலை 8 மணியளவில் கணவன் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டில் மனைவி தனது நண்பர் காவலருடன் தனிமையில் இருந்தை பார்த்துள்ளார். கணவர் சீக்கிரமே வீடு திரும்புவார் என மனைவி எதிர்பார்க்கவில்லை என்பதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அச்சமயம் மனைவியும், அந்த ஆண் காவலரும் அறைக்குள் தஞ்சமடைந்து கதவை பூட்டிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டிலிருந்து எழுந்த அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் கதவைத் திறந்து மூவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் கணவன் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், கதவைத் திறந்தவுடன் கணவன் தனது மனைவியையும், அவருடன் இருந்த ஆணையும் தாக்கிய காட்சி வீடியோவாக சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த பிரச்சனையை சம்பந்தப்பட்ட மூவரும் தாங்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளிப்புற நபர்கள் யாரும் அவசரப்பட்டு தலையிட வேண்டாம் என காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP Kushinagar police wife police friend illegal affair issue


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->