பெரியகுளத்தில் சர்ச்சை! பீர் பாட்டிலில் விஜய் மற்றும் வேட்பாளர் படம்...! - வைரலாகும் புகைப்படம்...! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக சபரி ஐங்கரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு சர்ச்சையான படம் கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த படத்தில், பீர் பாட்டிலில் கட்சி தலைவர் விஜய் மற்றும் வேட்பாளர் சபரி ஐங்கரன் ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டதுடன், ‘விசில்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு கட்சியின் மதிப்பையும், பொதுமக்களின் மனப்பதிவையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் தினேஷ் தலைமையில் கட்சியினர் பெரியகுளம் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை அணுகி முறையீடு செய்தனர்.

அந்த மனுவில், கட்சி தலைவர் மற்றும் வேட்பாளரின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி, அவற்றை பீர் பாட்டிலில் ஒட்டி சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர்களை கண்டறிந்து, அவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversy Periyakulam Picture Vijay and candidate beer bottle Photo goes viral


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->