2-வது இடத்துக்கு வந்தததையே பெருமையாக பேசுகிறார்கள் என்றால், என்ன விதமான உளவியலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்..? திமுக குறித்து திருமாவளவன் பேச்சு..!
Thirumavalavan remarked that the DMK is boasting about merely securing second place
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ் தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு திண்டிவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசுகையில் கூறியதாவது;
''ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு'' என 25 ஆண்டுகளுக்கு முன்பே பேசி வந்தேன். ''தமிழகத்தில் கூட்டணி அரசு உருவாகும்; அதற்கான காலம் கனியும்'' என்று திரும்பச் திரும்பச் சொல்லி வந்தேன்.
அதன்படி, பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக, காலம் கனிந்து, கூட்டணி அரசு உருவாகியிருக்கிறது. அந்தக் கூட்டணி அரசில் விசிக இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாங்கள் இதை உருவாக்கவோ, திட்டமிடவோ, பேரமோ பேசவில்லை. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் கூட்டணி அரசு உருவாகி சிறுத்தைகளின் மடியில் வந்து விழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கூட்டணியை தக்க வைத்துக் கொள்கின்ற முயற்சியை திமுக மேற்கொள்ளவில்லை என்பது தான், விடுதலை சிறுத்தை கட்சியின் விமர்சனம் என்றும், தமிழகத்தில் கூட்டணி அரசு விவாதங்கள் தொடங்கியிருக்கும் சூழலில், நம்மோடு இருக்கின்ற கூட்டணிக் கட்சிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும், அதற்கான முயற்சியை திமுக எடுத்திருந்தால், திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது 02-வது இடம் கிடைத்தது பற்றி பெருமை பேசுகின்றனர். ''நான் கேட்கிறேன். 02-வது இடம் கிடைத்தால் போதுமா! முதலிடம் வேண்டாமா..? என்று கூறியதோடு, 02-வது இடத்துக்கு வந்தததையே பெருமையாக பேசுகிறார்கள் என்றால், அவர்கள் என்ன விதமான உளவியலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று திருமாவளவன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
English Summary
Thirumavalavan remarked that the DMK is boasting about merely securing second place