கோவையில் தனியார் மதுக்ககடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது; ரூ.1.86 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் பறிமுதல்..!
Six people including college students were arrested in Coimbatore for attempting to pass counterfeit notes at a private liquor shop
கோவையில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 06 பேரை போலீஸார் கைது செய்து விவரித்து வருகின்றனர்.
கோவை உக்கடம்-பேரூர் புறவழிச்சாலையில், தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மதுக்கூடத்துக்கு வந்த சில இளைஞர்கள் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மதுபாட்டில்களை வாங்கியுள்ளனர். அந்த நோட்டின் மீது கடை ஊழியர்களுக்கு சந்தேகம் வந்ததையடுத்து, அவர்கள் அதை பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது அது, கள்ள நோட்டு எனத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லாதவாறு ஊழியர்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, கடைவீதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையின்படி, அவர்கள் கோவை கரும்புக்கடையைச் சேர்ந்த அக்தர் பர்வேஷ்(21), கரும்புக்கடையைச் சேர்ந்த ஆபில்(20), செல்வபுரத்தைச் சேர்ந்த யாகூ லியாஸ், தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷாகித்(19), முகமது இர்பான்(18) ஆகியோர் எனத் தெரிய வந்துள்ளது.
உடனடியாக 05 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஆபில், முகமது இர்பான், ஷாகித் ஆகிய மூவரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த செல்வபுரத்தைச் சேர்ந்த முகேஷ்குமார் என்பவரையும் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது;''இக்கும்பலின் தலைவராக முகேஷ்குமார் இருந்துள்ளார். இவர் அசல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டு வந்துள்ளார். இவர்களிடம் இருந்து ரூ.1.86 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இதுவரை எவ்வளவு பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளனர், இதில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Six people including college students were arrested in Coimbatore for attempting to pass counterfeit notes at a private liquor shop