தாராபுரம், மது​ராந்​தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்கள் இருவர் பதவியேற்பு; முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்..! - Seithipunal
Seithipunal


தாராபுரம், மது​ராந்​தகம் ஆகிய தொகு​தி​களின் இடைத்​தேர்​தலில், தவெக சார்​பில் வெற்றி பெற்ற சத்​தி​ய​பாமா, மரகதம் குமர​வேல் ஆகியோர் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்​றுள்ளனர்.

தமிழகத்​தில் கடந்த ஏப்​ரலில் நடை​பெற்ற சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட சத்​ய​பாமா (தா​ராபுரம்), மரகதம் குமர​வேல் (மது​ராந்​தகம்) ஆகியோர் வெற்றி பெற்​றனர். ஆனால், தமிழகத்தில் தவெக ஆட்சியை கைப்பற்றியது. அதன்​பின் அவர்​கள் அந்த பதவியை ராஜி​னாமா செய்​து​ விட்டு தவெக கட்​சி​யில் இணைந்​தனர். தொடர்ந்து மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 02 தொகு​தி​களி​லும் இடைத்​தேர்​தல் கடந்த அக்​டோபர் 06-ஆம் தேதி நடை​பெற்​றது.

தேர்​தல் முடிவு​கள் கடந்த 09-ஆம் தேதி அறிவிக்​கப்​பட்​டன. இதில், மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் 20,040 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தி​லும், தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பாமா 9,471 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தி​லும் வெற்றி பெற்​றனர்.

இதையடுத்து சட்​டப்​பேரவை தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் தலை​மைச் செயல​கத்​தில் அவர்​களுக்கு நேற்று பதவி பிர​மாணம் செய்து வைத்​தார். இரு எம்​எல்​ஏ.க்​களும் உறு​தி​மொழியை வாசித்து எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்​றுக் கொண்​டனர். இந்த நிகழ்​வின் போது அமைச்​சர்​கள் என்​.ஆனந்த், கே.ஏ.செங்​கோட்​டையன், சிடிஆர்​.நிர்​மல்​கு​மார், ராஜ்மோகன், கோ.க.ஆதவ் அர்​ஜூ​னா, அருண்​ராஜ், நெ.மரிய​வில்​சன், ப.வெங்​கடரமணன், சட்​டப்​பேரவை செயலர் ஆர்​.​சாந்தி உட்பட பலர் கலந்​து​கொண்​டனர். பதவி​யேற்ற பின்​னர் 2 எம்​எல்​ஏக்​களும் முதல்​வர் விஜய்யை நேரில் சந்​தித்து வாழ்த்​துப் பெற்​றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two TVK MLAs who won the by election take the oath of office


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->