கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம்!
UP 7 yrs old child mystery death
உ.பி.: ஹத்ராஸ் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹத்ராஸில், தினை வயலில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் குதிபுரி ஜதன் கிராமத்தைச் சேர்ந்த ஜீவன் என அடையாளம் காணப்பட்டார்.
மே 8ஆம் தேதி, தனது தந்தை ராஜ்பால் சிங்கின் ஆலை அருகே உள்ள வயலில் தூய்மை பணிக்கு சென்றபோது சிறுவன் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
பலமுறை தேடியும் கிடைக்காததால், குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீஸார் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
இந்நிலையில், வயலில் கிடைத்த சடலத்தில் பல காயங்கள் இருந்ததோடு, உடல் சில பகுதிகள் சிதைந்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சடலத்தை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், உடற்கூராய்வு அறிக்கையின் பின்னர் முழுமையான உண்மை வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
UP 7 yrs old child mystery death