கச்ச எண்ணெய் கசிவால் பாதிப்படைந்த நிலத்தடி நீர்... ஆறு மாதங்களுக்குள் சுத்திகரிக்க வேண்டும்..! - Seithipunal
Seithipunal


தேசிய பசுமை தீர்ப்பாயம், 'தண்டையார்பேட்டை பகுதியில் மண்ணில் கலந்துள்ள பெட்ரோலிய பொருட்களை, பி.பி.சி.எல்., எனப்படும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் அகற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து, தண்டையார்பேட்டையில் உள்ள பி.பி.சி.எல்., நிறுவனத்துக்கு, குழாய் மூலமாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் கசிந்துள்ளது. இதனால், நிலத்தடி நீர் மற்றும் மண் பாதிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக அப்பகுதியில்  சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. இந்த பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, 2013-ல், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உள்ளிட்ட ஒன்பது பேர், மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த, பல நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு பல உத்தரவுகளை பிறப்பித்தது, அதாவது, கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தி, ஆறு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.

மண்ணில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்றும் முதல் திட்டத்தை, பி.பி.சி.எல்., நிறுவனம் நிறுத்தி விட்டு, நீரில் பெட்ரோலிய பொருட்கள் கண்டறியப்பட்ட வேறு இடத்தில், இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இந்த இரண்டாவது திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்தி, மண்ணில் கலந்துள்ள பெட்ரோலிய பொருட்களை, பி.பி.சி.எல்., நிறுவனம் அகற்ற வேண்டும். கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிலத்தடி நீரை சுத்திகரிக்கும் பணியை, ஆறு மாதங்களுக்குள் பி.பி.சி.எல்., மேற்கொள்ள வேண்டும்.

மனுதாரர்கள் யாரும் மேற்கொண்டு புகார்களை தெரிவிக்காததால், இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. ஏதேனும் புகார்கள் வந்தால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

underground water affected crude oil spill


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->