NEET (UG) 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு; தேசிய அளவில் 715 மதிப்பெண்களுடன் இருவர் முதலிடம்..! - Seithipunal
Seithipunal


2026 இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 11.21 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில்  பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியானாவைச் சேர்ந்த பன்ஷுல் 715 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 03-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக இணையத்தில் வினாத்தாள் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 550 நகரங்களில் உள்ள 5400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 22.79 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தோராயமாக 20 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இந்த நீட் மறுதேர்வில் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பன்ஷுல் பன்சால் ஆகிய இரு மாணவர்கள் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 19 மாணவர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களையும், 1,492 மாணவர்கள் 650-க்கு மேல் மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். 

அத்துடன், 600-க்கும் மேல் 10,160 மாணவர்களும், 500-க்கும் மேல் 90,780 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேசிய அளவில் 690 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 138 மாணவர்களில் 93 சதவீதத்தினர் முதல்முறையாக நீட் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் தங்களின் மதிப்பெண் அட்டைகளை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://neet.nta.nic.in  பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும், கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் (MCC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே அறிந்துகொள்ள வேண்டும். போலி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது மருத்துவ இடங்களை வாங்கித் தருவதாகக் கூறும் மோசடி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும், சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து neetug2026@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 011-40759000 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two students topped the national level with 715 marks in the NEET UG 2026 exam results


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->