பாகிஸ்தான் எல்லையில் சிக்கிய போதைப்பொருள் - இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகங்காநகர் பகுதி இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே போதைப்பொருள் கடத்தப்படுவதாக உளவுத்துறை மூலம் எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது, பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்திய எல்லைப் பகுதிக்குள் டிரோன் மூலம் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர், அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி, அதிலிருந்து கடத்தி வரப்பட்ட ஆறு கிலோ ஹெராயின் போதைப்பொருளையும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். 

மேலும், இந்த போதைப்பொருளை எல்லை பகுதியில் இருந்து கடத்திச் செல்வதற்காக வந்த கும்பலை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் துரத்திய போது இரண்டு பேர் மட்டும் பிடிபட்டதாகவும், மற்ற இருவர் தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, போலீசார் தப்பியோடிய நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peples arrested for drugs kidnape in pakisthan border


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->