கியூ ஆர் கோடு வசதியுடன் 254 தானியங்கி பயணசீட்டு விற்பனை எந்திரம் - ரெயில்வேத்துறை அறிவிப்பு..!
two hundrad and fifty four Automatic ticket vending machines south railway info
தெற்கு ரெயில்வே சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தெற்கு ரெயில்வே துறையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் தற்போது தொண்ணூற்று ஒன்பது தானியங்கி பயணசீட்டு விற்பனை எந்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இருப்பினும், கூடுதலாக 254 தானியங்கி பயணசீட்டு விற்பனை எந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த தானியங்கி எந்திரங்கள் மூலம் ரெயில் பயணிகள் முன் பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளை மிக சுலபமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த பயணசீட்டு எந்திரங்கள் தெற்கு ரெயில்வேயில் உள்ள ஆறு ரெயில்வே கோட்டத்திற்கும் வழங்கப்பட உள்ளன. அதில், தொண்ணூற்று ஆறு எந்திரங்கள் சென்னைக்கும், பன்னிரண்டு எந்திரங்கள் திருச்சிக்கும், நாற்பத்தாறு எந்திரங்கள் மதுரைக்கும், ஐம்பது எந்திரங்கள் திருவனந்தபுரத்திற்கும், முப்பத்து எட்டு எந்திரங்கள் பாலக்காட்டுக்கும், பன்னிரண்டு எந்திரங்கள் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கும் வழங்கப்பட உள்ளன.

அதுமட்டுமல்லாமல், இந்தத்தானியங்கி பயணசீட்டு விற்பனை எந்திரங்கள் ''கியூ ஆர் கோடு'' வசதியுடன் அமைக்கப்பட உள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்த கியூ ஆர் கோடு மூலம் பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள 'யூ.பி.ஐ' ஆப்கள் மூலமாக உடனுக்குடன் பயணசீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த எந்திரம் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெறும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
two hundrad and fifty four Automatic ticket vending machines south railway info