இந்த App-இல் புக் செய்தால் தான் மதுபானம் கிடைக்கும்.. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட அதிலிருந்து பல்வேறு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக பொதுப்போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், மால், ஜிம் போன்ற இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. 

தற்போது நான்காம் கட்ட ஊரடங்கிற்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே குடிமகன்கள் காலையில் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நெருக்கமாக நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்ற காட்சியை அனைவரும் கண்டிருப்போம். 

இது பல்வேறு மாநில பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் சத்தீஸ்கரில் மதுபானங்களை ஆன்லைனில் பெற குடிமகனாக மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது போன்று பல மாநிலங்களில் மது பாட்டிலை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடை இயக்கம் என கேரளா அரசு தெரிவித்துள்ளது. மேலும்,  App-இல் புக் செய்துவிட்டு நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today tasmac open in kerala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal