இன்று முதல் ஆரம்பமாகும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகும். ஆனால், இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் ஆரம்பமாகிறது. 

இந்நிலையில், நேற்று இந்தக் கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்கு மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, அரசியல் கட்சி குழு தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். 

இந்த கூட்டத்தில், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். இதில், குளிர்கால கூட்டத்த தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் மற்றும் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் படி, இன்று முதல் ஆரம்பமாகும் இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரை மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். இந்த குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today start Winter Session of Parliament meeting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->