பெங்களூர் : இன்று விமான கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!
today prime minister modi start flight exhibition in banglore
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் எலகங்கா விமானப்படை தளம் உள்ளது. இந்த தளத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இன்று பதினான்காவது சர்வதேச விமான கண்காட்சி தொடங்க உள்ளது.

இந்த கண்காட்சியை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். அவ்வாறு தொடங்கப்படும் இந்த நிகழ்ச்சி ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, விமானக் கண்காட்சியை தொடங்கி வைத்து பின்னர் இவ்விழாவில் உரையாற்ற உள்ளார். இவருடன் இந்த விழாவில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் விமானத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

அதன் படி, இன்று காலை 9.30 மணியில் இருந்து காலை 11.30 மணிவரை விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டு அதனை பிரதமர் நரேந்திர மோடி கண்டுகளிக்க உள்ளார். அதன் பின்னர், அவர் எலங்காவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்ல உள்ளார்.
இந்த சர்வதேச விமான கண்காட்சியின் நோக்கமே "இந்தியாவில் தயாரிப்போம்" என்றத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், விமான உதிரிபாகங்கள் தயாரிப்பதும், ராணுவ தளவாடங்கள் கொள்முதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும் ஆகும்.
English Summary
today prime minister modi start flight exhibition in banglore