இந்திய விடுதலைப் போராட்ட வீரர் திரு.சிவராம் ராஜகுரு அவர்கள் பிறந்ததினம்!.
Today is the birth anniversary of Indian freedom fighter Mr Sivarama Rajaguru
சுதந்திரப் போராட்ட புரட்சி வீரர் ராஜகுரு 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் கேடா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர் சிவராம் ஹரி ராஜகுரு.
இவர் 1919-ல் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பிரிட்டிஷ் அரசு மீது வெறுப்புக் கொண்டு 16-வது வயதில், சந்திரசேகர ஆசாத் மூலமாக இந்துஸ்தான் சோஷலிச குடியரசு அமைப்பில் இணைந்தார்.
பிறகு இவரை சிறந்த போர் வீரராக மாற்றினார் ஆசாத். புரட்சிப் படையில் பகத்சிங் மற்றும் சுகதேவ் இருவரும் இவருக்கு நெருங்கிய நண்பராக மாறினார்கள். மூவரும் சந்திரசேகர ஆசாத்துடன் இணைந்து லாலா லஜ்பத்ராயின் படுகொலைக்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி சான்டர்சனை 1928-ல் சுட்டுக்கொன்றனர்.

அதன்பின் 1929-ல் புனேயில் ஒரு கவர்னரை கொல்ல முயற்சி செய்தபோது போலீஸாரிடம் பிடிபட்டார். மற்ற வீரர்களுடன் இவரையும் லாகூர் சிறையில் அடைத்தனர்.
அப்போது வழக்கின் முடிவில் இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய சமயத்தில் மக்களின் ஆவேசத்தால் அச்சமுற்ற ஆங்கிலேய அரசு, குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய நாள் மாலையே யாருக்கும் தெரிவிக்காமல் அவசரமாக 1931-ம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி அன்று தண்டனையை நிறைவேற்றியது.
English Summary
Today is the birth anniversary of Indian freedom fighter Mr Sivarama Rajaguru