ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா.! 100 நினைவுச் சின்னங்கள் வண்ண விளக்குகளால் ஒளிர ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி, அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின் படி, இன்று டிசம்பர் 1 ம் தேதி அதிகாரப்பூர்வ முறைப்படி ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

இதன் காரணமாக, இந்தியா முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை அலங்கார வண்ண விளக்குகளால் ஒளிர விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தஞ்சை பெரிய கோவில் உள்பட நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ஜி-20 லோகோவால் ஒளிரச் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஐம்பது நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் ஒன்பது மற்றும் பத்து தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today india take leadership for G20 organization


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->