அந்தமான் - நிகோபாரில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்.!!
today andaman and nicobar earthquake
அந்தமான் - நிகோபாரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.52 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற புள்ளிக்கணக்கில் இன்று அதிகாலை 2.52 மணிக்கு அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது திக்லிபூர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு இடையே 147 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அதேபோல் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
English Summary
today andaman and nicobar earthquake