நீட் தேர்வு : தமிழக அரசின் ரிட் மனு.! இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. தற்போது, இந்த மனுவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் தமிழக அரசு, மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்களை குறிப்பிட்டுள்ளது. 

இந்த ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்சு தூலியா அமர்வு சமீபத்தில் விசாரணை செய்தது. அப்போது, "மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு ரிட் மனு விசாரணைக்கு உகந்தது என்று நீதிபதி உத்தரவிட்டனர். 

இதன் மூலம் நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று  எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt apeal case for neet exam supreme court trial


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->