கொரியன் கலாச்சாரத்துக்கு அடிமையான மூன்று இளம் சகோதரிகளின் விபரீத முடிவு; டைரியில் சிக்கி ஆதாரங்களால் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


கொரியன் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட 03 சிறுமிகள் நடத்தைகளில் மாற்றம் ஏற்பட்டதை பார்த்த பெற்றோர் கண்டித்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12, 14, 16 வயதுடைய மூன்று சகோதரிகளும், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திராபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.

மூவரும் நீண்ட காலமாகத் தங்களை ஒரு அறைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரிய மொழி கற்பது, கொரிய உணவுகளை உண்பது மற்றும் 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.

நாளடைவில் இவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கண்டு பெற்றோர் கண்டித்துள்ளனர். அத்துடன் சிறுமிகளில் மொபைல் போன்களை பறித்துள்ளனர். இதனால் அவர்கள் மூவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சம்பவ தினமான நேற்று வர்கள் மூவரும் தங்கள் குடியிருப்பின் 09 வது மாடியில் உள்ள வீட்டில் தங்கள் அறையில் உள்ள ஜன்னல் வழியே இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் தற்கொலைக்கு முன் எழுதி வைத்திருந்த டைரியில் கண்டெடுத்துள்ளனர். அதில் அவர்கள் தற்கொலைக் கடிதம் எழுதி வைத்திருந்துள்ளனர்.

அதாவது, "நாங்கள் சாகப்போவதில்லை; இந்த உடல் ரீதியான உலகத்தை விட்டு வெளியேறி, எங்களின் உண்மையான தேசமான தென்கொரியாவிற்குச் செல்கிறோம். இந்தியாவின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் சமூகக் கட்டுக்கோப்புகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை.

நாங்கள் கொரியர்களாகவே வாழ விரும்புகிறோம். எங்கள் ஆன்மா ஏற்கனவே கொரியாவில் தான் வசிக்கிறது; இந்த உடலையும் அங்கேயே கொண்டு சேர்க்கப் போகிறோம்.

எங்களை கொரியாவிற்கு அனுப்ப நீங்கள் மறுத்துவிட்டீர்கள். எங்கள் போன்களைப் பறித்து எங்களைச் சிறை வைத்தீர்கள். இனி எங்களால் இங்கே வாழ முடியாது" என்று எழுதி மூவரும் கொரிய மொழியில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் போலீசார் அவர்களின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் அவர்கள், சில ஆன்லைன் கொரிய குழுக்களுடன் தொடர்பில் இருந்ததும், அங்கு தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விதமான கருத்துகள் பகிரப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, நிஜமான வாழ்க்கையின் ஏற்படும் கவலைகளில் இருந்து தப்பிக்க இணைய உலகையே உண்மையான வாழ்க்கையாகக் கருதும் சிலர்,  இவ்வாறான ஒரு தீவிரமான ஆன்லைன் அடிமைத்தனம் (Online Escapism) என்று மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three young sisters in Uttar Pradesh addicted to Korean culture commit suicide


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->