சத்தீஸ்கர்: பிஜப்பூரில் நடந்த என்கவுன்டரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூரில் நடந்த என்கவுன்டரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஷ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பொம்ரா வனப்பகுதியில், மீர்துர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து மத்திய ரிசர்வ் படையினருடன் இணைந்து, சிறப்பு அதிரடி படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் காலை 7.30 மணியளவில் அதிரடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில், 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த மோதலில், 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெண் மாவோயிஸ்டு ஒருவரும் அடங்குவார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்று காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் பி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three Maoists killed in encounter in Chhattisgarh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->