திருட்டு ரயில் பயணம் : 126.18 கோடி ரூபாய் வசூல்.! - Seithipunal
Seithipunal


மத்திய ரெயில்வேயில் பயணிகள் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்க ரெயில் நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 18,37,000 பேர் சிக்கியுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து அவர்களிடம் இருந்து ரூ.126.18 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

இதில் கடந்த ஜூலை மாதம் மட்டும் ரெயிலில் டிக்கெட் இல்லாமல் 3.27 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.20 கோடியே 66 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான நான்கு மாதத்தில் ரெயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 7½ லட்சம் பேர் பிடிபட்டுள்ளனர் என்றும், அவர்களிடம் இருந்து ரூ.45.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய ரெயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thith out train last 4 month


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->