திருப்பதி தேவஸ்தான இணையதளம் முடக்கம்.. முன்பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பக்தர்களின் வசதிகளுக்காக பல்வேறு வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு காணிக்கைகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திற்கும் 300 ரூபாய் தரிசன டிக்கெட், அங்கபிரதட்ணம் டிக்கெட் ஆர்ஜித சேவை உள்ளிட்ட தரிசனத்திற்கான டிக்கெடுகள் திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

அதன்படி, ஏப்ரல் மாதத்திற்கான 300 தரிசன டிக்கெட் நேற்று காலை 10 மணிக்கு https://tirupatibalaji.ap.gov.in என்ற திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான இணையதளம் இன்று திடீரென முடங்கியுள்ளது. அதன் காரணமாக தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் அறைகள் முன்பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirupathi Thevashtham online portal down


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->