முன் விரோதத்தால் பழக்கடைக்கு தீ வைத்த டீ கடை இளைஞர்..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் சேதராப்பட்டு அருகே உள்ள அச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் வயது 50. இவரது மனைவி ஜெயந்தி. இவர்கள் இருவரும் சேதராப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையின் ஓரத்தில் தனியார் கட்டிடத்தின் எதிரே பழக்கடை ஒன்று வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

இவர்கள் வழக்கம்போல் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு சென்ற காலையில் மீண்டும் கடையை திறக்க வந்த போது கடை முழுவதும் எரிந்து சாம்பலாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வானூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் டீ வியாபாரம் செய்து வரும் இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து இந்த கடையில் பிரச்சினை செய்து வந்ததும். இரவு அந்த வாலிபர் சேகர் மற்றும் ஜெயந்தியிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டதும் இதன் காரணமாக பழக்கடைக்கு அவர் தீவைத்தது தெரிய வந்தது. 

இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். ஏற்கனவே சேகர் அதே ரோட்டில் பழக்கடை நடத்தி வந்த போது அந்த கடையை சில மாதங்களுக்கு முன்பு இதே போல் நள்ளிரவில் மர்ம நபர்கள் எரித்து சேதப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The tea shop youth set fire to the shop due to previous enmity


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->