வாட்ஸ் அப்பில் அடுத்த புதிய வசதி..அவர்களை மிஸ் பண்ணாமல் பார்க்கலாம்!
The next new feature on WhatsApp you can see them without missing anyone
நெருக்கமானவர்களின் ஸ்டேடஸ்களை மிஸ் பண்ணாமல் பார்க்கலாம் என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப் செயலியை உலக முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலி பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் அறிமுகம் செய்வது வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ் அப்பில் பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. இதன்படி, நமக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் ஸ்டேடஸ் வைத்தால் அதை அலர்ட் செய்யும் வகையில் நோட்டிபிகேஷனை ஆன் செய்து வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இதன் மூலம் அவர்கள் ஸ்டேடஸ் வைத்தால் உடனே அலர்ட் காட்டும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது . வாட்ஸ் அப்பை பொறுத்தவரை அனைத்து ஸ்டேடஸ்களையும் சிலர் பார்க்க விரும்புவது இல்லை. வேண்டிய நபர்களின் ஸ்டேடஸ்களை மட்டுமே பார்க்க நினைக்கும் பயனர்களுக்கு இந்த புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும். வாட்ஸ் அப்பின் இந்த புது அப்டேட் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிகிறது.
English Summary
The next new feature on WhatsApp you can see them without missing anyone