சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம்.! அச்சத்தில் விஜயநகர் மக்கள்.! 
                                    
                                    
                                   The leopard attacked the farmer and injured him Karnataka 
 
                                 
                               
                                
                                      
                                            கர்நாடகா மாநிலத்தில் சிறுத்தை தாக்கியதில் விவசாயி வளர்த்த காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குமாரசாமி. இவர் வளர்த்து வரும் ஆடு, மாடுகளை அழைத்து கொண்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று, குமாரசாமியை தாக்கிவிட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடி உள்ளது. இதில் குமாரசாமியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த குமாரசாமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       The leopard attacked the farmer and injured him Karnataka