மனைவியை பணயம் வைத்து சூதாட்டம் ஆடிய கணவன்! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சணைக்காக என் மாமனாரும் என் கணவரும் என்னை சித்ரவதை செய்து தாக்கினர் என ஷஹபாத் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில், 2013-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. வரதட்சணைக்காக என் கணவரும் என் மாமனாரும் என்னை சித்ரவதை செய்தனர். மது மற்றும் சூதாட்டத்திற்கு என் கணவர் அடிமையானவர், அவர் சுமார் ஏழு ஏக்கர் நிலத்தையும், எனது நகைகள் அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்துவிட்டார்.

மேலும், என்னை பணயம் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யவும் அவரது நண்பர்களுடன் சூதாட்டத்தின்போது  அனுமதியளித்துள்ளார். பின்னர், அவரது நண்பர்கள் முன்பு என்னை தாக்கினார். இந்த காரணத்தால் எனது அம்மா வீட்டுக்குச்  நான் சென்றுவிட்டேன். ஆனால், செப் 4-ம் தேதி அன்று அவர் என் அம்மா வீட்டிற்கு நண்பர்களுடன் சேர்ந்து வந்து எனது கையை உடைத்து என்னை அவர் வீட்டுக்கு இழுத்துச் செல்ல முயன்றனர்.

பின்னர், என் உடைகளைக் அவர் கிழித்து தாக்கினார், அவருடன் வந்த நண்பர்களும் சேர்ந்து என்னை தாக்கினர். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதனால், எனது கணவர் மீதும் அவர் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

என்னால் இப்போது அவர்கள் எனக்கு செய்த கொடுமைகளை வெளியில் கூற முடியாது. நான் அதை அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அங்கு வெளிப்படுத்துவேன்' என்று அந்த அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த சம்வபம் குறித்து பதிவு செய்து  ராம்பூர் காவல் கண்காணிப்பாளர் வித்யாசாகர் மிஸ்ரா வழக்கு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband gambled at the risk of his wife


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->