முதல்வரின் கையெழுத்து இல்லாமல் ஒப்புதல் கேட்டு கவர்னர் அலுவலகத்திற்கு வந்த கோப்புகள்..! - Seithipunal
Seithipunal


டில்லியில், கவர்னர் விகே சக்சேனா அவர்கள், முதல்வர் கெஜ்ரிவால் கையெழுத்து இல்லாமல், அவரது அலுவலக ஊழியர்கள் கையெழுத்து போட்டு அனுப்பிய கோப்புகளை  திருப்பி அனுப்பினார்.

டில்லியின் துணை நிலை கவர்னர் விகே சக்சேனா மற்றும் முதல்வர் கெஜ்ரிவால் அரசுக்கு இடையே மோதல் போக்குள்ள நிலையில், கவர்னரின் ஒப்புதல் கேட்டு அவரின் அலுவலகத்திற்கு 45க்கும் மேற்பட்ட கோப்புகளை முதல்வர் அலுவலக அதிகாரிகள் அனுப்பி வைத்திருந்தனர். அந்த கோப்புகளில் முதல்வர் கையெழுத்து போடாமல் அலுவலக அதிகாரிகள் கையெழுத்து போட்டிருந்தனர். 

சென்ற வாரம் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய சக்சேனா, கோப்புகளில் முதல்வரின் கையெழுத்து இல்லாததை சுட்டிக்காட்டியிருந்தார். அந்த கடிதத்தில், முதல்வரின்  கையெழுத்து இல்லாமல் கோப்புகளுக்கு ஒப்புதல் மற்றும் கருத்து கேட்டு கவர்னர் அலுவலகத்திற்கு வருவதாக கூறியிருந்தார். இந்த கடிதத்திற்கு பிறகும் முதல்வர் கையெழுத்து இல்லாமல் கோப்புகள் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சக்சேனா அந்த கோப்புகளை, ஒப்புதல் அளிக்காமல் டில்லி அரசுக்கே திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பிய கோப்புகளில், கல்வித்துறை, வக்பு போர்டு உள்ளிட்ட முக்கிய கோப்புகள் அடங்கும் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The files came to governor's office asking for approval without signature of chief minister


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->