அவதூறு செய்ய முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது; ராகுலுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் ராகுலின் பேச்சு கண்டனத்திற்குரியது என தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தவறான தகவல்களை பரப்புவது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம் என்று ராகுலின் வாக்கு சதவீதம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பற்றி குறை கூறும் வகையில் பேசியிருந்தார்.

அதாவது, 'தேர்தல் ஆணையம் மாலை 05:30 மணிக்கு வாக்களித்தோர் எண்ணிக்கையை எங்களுக்கு வழங்கியது, மாலை 05:30 மணி முதல் 07:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது உடல் ரீதியாக சாத்தியமற்றது என்று குறிப்பிட்டார். அத்துடன், ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் மூன்று நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கிட்டால், அதிகாலை 02 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் இருந்தனர், ஆனால், இது நடக்கவில்லை' என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கு தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது; காங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும், இவ்வாறு தவறான தகவல்களை பரப்புவது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ராகுலின் கருத்து அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களின் முயற்சிகளைப் புண்படுத்துவதாகும் என்று கூறியுள்ளது.

அத்துடன், இதுபோன்ற கூற்றுக்கள் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், தேர்தல்களின் போது சோர்வில்லாமல் மற்றும் வெளிப்படையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களை கொச்சைப்படுத்த கூடாது வேண்டும் தலைமை தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டதாகக் கூறி அதை அவதூறு செய்ய முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது என்றும் தேர்தல் ஆணையம் மேலும் கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Election Commission has condemned Rahul Gandhi for trying to defame him


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->