இந்தியாவின் தொடர் முயற்சி: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஐ.நா., தடைவிதித்துள்ளது: மத்திய அரசு..!
The central government says that the UN has banned Pakistani terrorists due to India continuous efforts
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சி காரணமாக பாகிஸ்தானைச் சேர்ந்த பல பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஐ.நா., தடை விதித்துள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
இந்தியா, பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடர் முயற்சி காரணமாக சர்வதேச சமூகமானது எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த நமது கவலையை புரிந்து கொண்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியாவின் இந்த தொடர் முயற்சியால், பாகிஸ்தானை சேர்ந்த பல பயங்கரவாத அமைப்புகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான எப்ஏடிஎப் அமைப்பும், பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்து இருந்தது எனவும் கீர்த்தி வரதன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், காஸ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அதற்கு காரணமான பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கையை பல உலக தலைவர்கள் அங்கீகரித்துள்ளனர் எனவும், இதன் பின்னணியில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய டிஆர்எப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளார்.
English Summary
The central government says that the UN has banned Pakistani terrorists due to India continuous efforts