பா.ஜ.க. பொய்களையே பரப்புகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு!
The BJP is spreading lies Siddharamaiahs allegation
கர்நாடகாவில்,நாங்கள் வாக்குறுதி அளித்தவற்றை நிறைவேற்றி இருக்கிறோம் ,ஆனால் 2018-ம் ஆண்டு 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க., அவற்றில் 10 சதவீதம் அளவுக்கு கூட நிறைவேற்றவில்லை என சித்தராமையா குறை கூறியுள்ளார்.
விஜயநகரா நகரில் நடந்த சமர்ப்பண சங்கல்ப பேரணியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது, 2 ஆண்டுகளுக்கு முன், மக்களுக்குதேர்தல் அறிக்கையில் 593 வாக்குறுதிகள் இருந்தன. இதுவரை நாங்கள் 242 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
அடுத்த 3 ஆண்டுகளில் மீதமுள்ளவற்றையும் நிறைவேற்றுவோம் என கூறினார். ஓராண்டில் சக்தி யோஜனா திட்டம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து கிரஹ ஜோதி, அன்னபாக்யா, கிரக லட்சுமி மற்றும் யுவ நிதி என மொத்தம் 5 திட்டங்களை கொடுத்திருக்கிறோம்.
2013-ம் ஆண்டு, காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது. மொத்தம் அளித்த 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். ஆனால், 2018-ம் ஆண்டு 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க. அவற்றில் 10 சதவீதம் அளவுக்கு கூட நிறைவேற்றவில்லை. அவர்கள் எப்போதும் பொய்களையே கூறுகின்றனர் என்றும் கூறினார்.
English Summary
The BJP is spreading lies Siddharamaiahs allegation