மும்பை தேர்தல்; எளிதாக அழியும் மை குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு; பதிலடி கொடுத்துள்ள பாஜக..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் பாஜ - சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இந்த தேர்தலின் போது வாக்காளர்கள் கையில் வைக்கப்படும் மை, எளிதாக அழிக்கப்படும் வகையில் இருந்ததாக ராஜ் தாக்கரே குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தி "தேர்தல் ஆணையம் மக்களை தவறாக வழி நடத்துவதால் நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளது. வாக்குத் திருட்டு என்பது ஒரு தேச விரோதச் செயல்," என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா தக்க பதில் கொடுத்துள்ளார். அதாவது, ''சாக்குப்போக்கு சொல்லும் படை திரும்பியது. எண்ணிக்கை முடிவதற்குள் தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா?'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ,'' ராகுல் வழமைபோல தான் சிறப்பாக செய்வதை செய்யத் திரும்புகிறார். இழிவுப்படுத்துதல், திரித்தல் மற்றும் தவறான தகவல். பரம்பரை திருடன் (Khandani chor) இப்போது தாக்கரேக்களின் கூற்றுகளை மீண்டும் எழுப்புகிறது." என மேலும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The BJP has retaliated against Rahul Gandhis allegation regarding the use of easily erasable ink in the Mumbai elections


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->