குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி மந்திரவாதி செய்த செயல்! - Seithipunal
Seithipunal


மூடநம்பிக்கையில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேய் விரட்டும் பெயரில் கொடூரமாக தாக்கிய மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பஹேல்வான்பூர் கிராமத்தை சேர்ந்த அனுராதா (வயது 35), திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனும் குழந்தையின்மை காரணமாக மன உளைச்சலில் இருந்தார். இதனை பயன்படுத்தி, ஒரு போலி மந்திரவாதி, "உள்ளே பேய் உள்ளது, அதனால் தான் குழந்தை பாக்கியம் இல்லை" என்று கூறியுள்ளார்.

பேய் விரட்டும் சடங்குக்காக ரூ.1 லட்சம் வாங்கிய மந்திரவாதி, அனுராதாவை தலையை இழுத்து, வலுக்கட்டாயமாக கழிப்பறை நீரை குடிக்கவைத்து, உருட்டுக்கட்டையால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அனுராதா உயிரிழந்தார்.

இதையடுத்து, மந்திரவாதி தலைமறைவான நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது மனைவி மற்றும் உதவியாளர்கள் பற்றிய தேடுதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் மூடநம்பிக்கையின் பேரில் ஒரு உயிரை களைந்த கொடூரமான நிகழ்வாக அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The act of the sorcerer claiming to grant fortune to the child


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->