டில்லி செங்கோட்டை தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பில் 09 வது பயங்கரவாதி கைது..!
The 9th terrorist has been arrested in connection with the Delhi Red Fort suicide attack
தலைநகர் டில்லியில், செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த மற்றொரு முக்கிய பயங்கரவாதியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 10-ஆம் தேதி மாலை 06:52 மணியளவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்ததோடு,பலர் காயமடைந்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக என்ஐஏ அமைப்பு விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த வழக்கில் இதுவரை காஷ்மீரை சேர்ந்த டாக்டர்கள் உட்பட 08 பயங்கரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த வழக்கில் 09-வது குற்றவாளியாக ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த யாசிர் அகமது தர் என்பவனை டில்லியில் வைத்து என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளான்.

கார் குண்டுவெடிப்பு சதியில் யாசிர் அகமது தர்ருக்கு முக்கிய பங்கு இருந்ததுடன், அதற்காக அவன் தீவிரமாக பணியாற்றியதையும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவது என உறுதிமொழி ஏற்றதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
செங்கோட்டையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் உன் நபி மற்றும் மற்றொரு குற்றவாளி முப்தி இர்பான் ஆகியோருடன் இவன் தொடர்பில் இருந்துள்ளதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
English Summary
The 9th terrorist has been arrested in connection with the Delhi Red Fort suicide attack