'பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை சகித்துக்கொள்ளவோ, எந்த நியாயமும் கற்பிக்கப்படக்கூடாது; கண்துடைப்பு நடவடிக்கையும் கூடாது': வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்..! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவு த்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ''பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பான நடவடிக்கை இருக்கக்கூடாது. அதனை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது,'' என கூறியுள்ளார்.

அத்துடன், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றை எதிர்த்து போராடுவதற்காக தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு துவங்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அச்சுறுத்தல் இன்னும் தீவிரம் அடைந்துள்ளதாகவும், எந்த வடிவில் பயங்கரவாதம் வந்தாலும் அதனை சகித்துக் கொள்ளக்கூடாது என்றும், அதற்கு எந்த நியாயமும் கற்பிக்கப்படக்கூடாது எனவும், கண்டு காணாமல் இருக்கக்கூடாது. கண்துடைப்பு நடவடிக்கை கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா செய்து காட்டியது போல், பயங்கரவாதத்துக்கு எதிராக நமது மக்களைப் பாதுகாக்க நமக்கு உரிமை உண்டு, அதை செயல்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அங்கு பேசிய ஜெய்சங்கர் கூறுகையில்; மாறி வரும் உலகளாவிய நிலப்பரப்புக்கு ஏற்ப ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை மாற்றியமைப்பதுடன் அதனை விரிவுபடுத்த வேண்டும். அதன் செயல்பாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என இந்தியா நம்புகிறதாகவும், இதற்கு ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு வழங்குவதுடன், நேர்மறையான பங்களிப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த இந்தியா எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பொருத்தமானவை. கலாசாரத்தைப் பொறுத்தவரை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடனான இந்தியாவின் உறவு நீண்டகாலமாக இருக்கிறது என்றும் பேசியுள்ளார்.

மேலும், இந்த அமைப்பை நவீனமயமாக்க வேண்டும் எனவும், இதனை சீர்திருத்தம் செய்ய இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ளும் மையங்களை இந்தியா வரவேற்கிறதாகவும், சமகால மாற்றங்களுடன் இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrorism in any form should not be tolerated or turned a blind eye says Foreign Minister Jaishankar


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->