வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்கு இலவச தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு: விபரங்கள் உள்ளே..! - Seithipunal
Seithipunal


திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் 2025-2026 வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 30, 2025 முதல் ஜனவரி 08, 2026 வரை நடைபெற உள்ளது. இந்த வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி 10 நாட்களில், 164 மணி நேரம் இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வரும் 27-ஆம் தேதி முதல் டிசம்பர் 01 வரை இதற்காக பதிவு செய்யும் பக்தர்களை, குலுக்கலில் தேர்வு செய்து டிக்கெட் வழங்கப்படவுள்ளது.

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக சிறப்பு தரிசனம் நடைபெறும். இதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும். 

இது பொதுவாக டிசம்பர் பிற்பகுதியில் தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும். இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டும், அத்துடன், ஆன்லைன் டிக்கெட்டுகளைப் பெற திருப்பதி தேவஸ்தான இணையதளத்தை சரிபார்க்க வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி நாட்களில் திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருக்கும், எனவே முன்கூட்டியே பக்தர்கள் திட்டமிடுவது அவசியமாகும். டிக்கெட் முன்பதிவு மற்றும் தரிசனத் தேதிகள் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்க்கவேண்டும்.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி 10 நாட்களில், 164 மணி நேரம் இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. எதிர்வரும் வரும் 27-ஆம் தேதி முதல் டிசம்பர் 01 வரை இதற்காக பதிவு செய்யும் பக்தர்களை, குலுக்கலில் தேர்வு செய்து டிக்கெட் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupati Devasthanams has decided to provide free darshan for 10 days on the occasion of Vaikuntha Ekadashi


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->