ராகுல்காந்தி இல்லாமல் பாஜக இல்லை - மல்லிகார்ஜுன் கார்கே.!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகருக்குச் சென்றார். இதையடுத்து, நேற்று அவர், ராகுல் காந்தியுடன் பாதயாத்திரையில் கலந்துகொண்டார். 

அதன் பின்னர் கார்கே ராகுல்காந்தியுடன், அன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு தெருமுனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது, 

'இந்தியாவில் மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் நாட்டை இரண்டாக பிளக்கவும், நாட்டில் வெறுப்புணர்வை பரப்பவும் முயற்சி செய்கின்றனர். மோடியும், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரேசகர ராவும் ஒன்றுதான். 

இதையடுத்து, பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாக வேஷம் போடும் சந்திரசேகர ராவ், பா.ஜ.க. கொண்டுவரும் அனைத்து சட்டங்களுக்கும் ஆதரவாகத்தான் இருக்கிறது. 

மேலும், மற்ற மாநிலங்களுக்குச் சென்று பிற கட்சித் தலைவர்களை சந்தித்துவரும் சந்திரசேகர ராவ், முதலில் தெலுங்கானாவில் கவனம் செலுத்த வேண்டும். காங்கிராஸும், ராகுல் காந்தியும் இல்லாமல் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. அரசு வருவதற்கு வாய்ப்பே இல்லை.

இதையடுத்து, வருகிற 2024-ம் ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும்.' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

telungana hydrabad ragulkanthi padayatra mallikarjun speach


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->