தெலுங்கானா: பெண் வீட்டில் புகுந்து 1 லட்சம் கேட்டு மிரட்டிய போலி சாமியார்கள்!   - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில், ஆசிரமப் பசுக்களைப் பராமரிக்கப் பணம் கேட்டு ஒரு பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து மிரட்டல் விடுத்த நான்கு போலி சாமியார்கள் குறித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், உய்யூர் அருகேயுள்ள ஆகனூர் கிராமம். பிரசாத் ராவ் என்பவரின் மனைவி மணி வீட்டில் தனியாக இருக்கும்போது, காவி உடை அணிந்த 4 சாமியார்கள் மந்திரங்களை உச்சரித்தபடி வீட்டிற்குள் நுழைந்தனர்.

தங்களுக்கு ஆசிரமம் இருப்பதாகவும், அங்கிருக்கும் பசுக்களைப் பராமரிக்க ரூ. 1 லட்சம் தர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மணி கூறியபோது, "பணம் தராவிட்டால் உன்னைச் சாபம் விட்டு நாசமாக்கி விடுவேன்" என்று அவர்கள் மிரட்டியுள்ளனர்.

பயந்துபோன மணி தன்னிடம் இருந்த ரூ. 5,000-த்தை அவர்களிடம் கொடுத்தார். அப்போது வீட்டிற்கு வந்த மணியின் மருமகன் வெங்கட சிவராம கிருஷ்ணாவிடமும் ரூ. 1,000-த்தை அந்தச் சாமியார்கள் பறித்துக் கொண்டனர்.

காவல்துறை நடவடிக்கை: இது குறித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப் பதிவு செய்து, அந்த நான்கு சாமியார்களையும் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து இது போன்ற மிரட்டல்கள் நடப்பது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

telangana money threat case


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->