சிறுமி பாலியல் பலாத்காரம் கொலை.. குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 இலட்சம் சன்மானம்.! - Seithipunal
Seithipunal


6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 இலட்சம் சன்மானம் வழங்குவதாக ஹைதராபாத் காவல்துறை அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகேயிருக்கும் சைதாபாத் சிங்கரேணி காலனி பகுதியில் 6 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சிறுமி திடீரென மாயமான நிலையில், அவரை பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. 

பின்னர், அவரின் உடல் அப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கையில், வீட்டிற்கு அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும், சிறுமி காணாமல் போனதில் இருந்து ஆட்டோ ஓட்டுனரும் தலைமறைவாகி இருக்கிறார். இதனையடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து ஆட்டோ ஓட்டுனரை தேடி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனரின் பெயர் பள்ளக்கொண்டா ராஜு. இவன் குறித்த உரிய தகவலை தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெலுங்கானா காவல் துறை அறிவித்துள்ளது.

இவன் குறித்த தகவல் அறிந்தாலோ அல்லது ஏதேனும் இடங்களில் கண்டாலோ உடனடியாக 94906 16366 மற்றும் 94906 16627 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெலுங்கானா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

தெலுங்கானா காவல் துறையின் பத்திரிகை செய்தி காமுகனின்  புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Hyderabad Police Announce Rs 10 Lakh Reward for Giving Information 6 Aged Child Sexual Abuse Murder Culprit


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal