என்னடா நடக்குது நாட்டுல! தலை முடி வெட்டாததை கண்டித்த ஆசிரியர்...! ஆத்திரத்தில் குத்திக் கொன்ற மாணவர்கள்!!! - Seithipunal
Seithipunal


அரியானாவில் ஹைசர் மாவட்டம் பாஸ் கிராமத்தில் தனியார் மேல்நிலை பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் செயலாளராக 55 வயதான ஜக்பீர் சிங் பானு செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், பள்ளிக்கூடத்தில் பயின்றுவரும் மாணவர்கள் சரியாக தலை முடி வெட்ட வேண்டும் மற்றும் சீருடையை சரியாக அணியவேண்டும் என்று செயலாளர் ஜக்பீர் சிங் வலியுறுத்தி வந்தார்.

இதனிடையே நேற்று மதியம், அந்த பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வந்த 2 மாணவர்கள் சரியாக முடிவெட்டாததை கண்ட பள்ளி செயலாளர் ஜக்பீர் சிங் பானு, பள்ளி வளாகத்தில் வைத்து மாணவர்களை கண்டித்துள்ளார்.

இதனால் கோபத்தில் ஆத்திரமடைந்த மாணவர்கள் இருவரும், தாங்கள் பள்ளிக்கு மறைத்து கொண்டுவந்த கத்தியால் ஜக்பீர் பானுவை சரமாரியாக குத்தினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார் ஜக்பீர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமத்தினர்.அங்கு ஜக்பீரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட துக்கச்செய்தியை அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், தப்பியோடிய 2 மாணவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

teacher who criticized student for not cutting his hair Students stabbed him to death in anger


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->