தனியார் பள்ளியில் லிப்டில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தனியார் பள்ளியில் லிப்டில் சிக்கி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் மலட் மேற்கு பகுதியில் தனியார் ஆங்கில பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜெனியல் பெர்னாண்டஸ் (வயது 26) என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பள்ளியில் 6-வது மாடியில் ஆசிரியை ஜெனியல் நேற்று மதியம் 1 மணிக்கு வகுப்பை முடித்துவிட்டு லிப்டில் 2-வது மாடியில் உள்ள பணியாளர்கள் அறைக்கு சென்றுள்ளார். அப்போது, 6-வது மாடியில் லிப்டிற்குள் ஜெனியல் நுழைந்துள்ளார். 

அப்போது, திடீரென லிப்ட் மேலே சென்றுள்ளது. ஆசிரியை ஜெனியல் லிப்டிற்கும், 6-வது மாடிக்கும் இடையே சிக்கிக்கொண்டார். அப்போது, லிப்ட் வேகமாக மேலே சென்றதில் லிப்டிற்கும், சுவருக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதில், ஆசிரியை ஜெனியல் படுகாயமடைந்தார்.

 படுகாயமடைந்த ஜெனியலை மீட்ட சக ஆசிரியைகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், ஜெனியலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher dies after getting stuck in lift in private school


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->