இந்தியாவுக்கு வரிச்சலுகை: குறைப்பு உத்தரவில் டிரம்ப் கையெழுத்து… இருநாட்டு கூட்டறிக்கை வெளியீடு! - Seithipunal
Seithipunal


ரஷியாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததை காரணமாகக் கொண்டு இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரி விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மீது 25 சதவீத அபராத வரி விதிக்கும் முடிவை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதன் மூலம் இருநாட்டு வர்த்தக உறவுகள் மீண்டும் சமநிலைக்கு திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.ஆனால், இதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மீண்டும் ரஷிய எண்ணெய் கொள்முதல் செய்தால் புதிய வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்காவிலிருந்தே எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மாற்றத்தின் மூலம் இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மொத்த வரிச்சுமை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் விளக்கமாக பகிர்ந்துள்ளார்.

அவரது குறிப்புப்படி, இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு சுமார் 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 18 சதவீத இறக்குமதி வரி விதிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

அதேசமயம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்கள் மற்றும் பல்வேறு விவசாயப் பொருட்களுக்கு வரி குறைப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வர்த்தக சமரசம், இந்தியா–அமெரிக்கா பொருளாதார உறவை வலுப்படுத்தும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tax concessions India Trump signs reduction order Joint statement released by two countries


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->