தமிழ்நாடா.? தமிழ்நாயுடுவா.? குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தின் பெயரால் குழப்பம்.!  - Seithipunal
Seithipunal


ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் 24வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் நேற்று குடியரசு தின விழா நடந்தது. அதில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களின் வாகன ஊர்திகளும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.

இந்த நிலையில், இதில் எந்த மாநிலத்தின் வாகன ஊர்திகள் சிறந்த அலங்காரம் கொண்டது என்று மக்களிடம் விருப்பம் கேட்கப்பட்டது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. 

இதில், மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு என்று குறிப்பிடுவதற்கு பதில் தமிழ் நாயுடு என்று பெயர் இருக்கின்றது. இதை தற்போது சமூக வலைதளங்களில் கண்டனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே ஆளுநர் தமிழ்நாடு தமிழகம் என்று பிரச்சினையை கிளப்பிய நிலையில் தற்போது இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Vehicle name as Tamil naidu


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal