முகேஷ் அம்பானி வீட்டருகில் மர்ம வாகனம்.! சோதனையில் பேரதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி பணக்காரர்களில் முக்கியமான ஒருவராக திகழும் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களுக்கு மும்பையில் ‘அண்டிலியா’ என்ற பெயருடன் பிரமாண்ட பங்களா ஒன்று இருக்கின்றது. 

இந்த பங்களாவிற்கு வெளியே நேற்று நீண்ட நேரமாக சொகுசு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் இதுகுறித்து தகவலறிந்த மும்பை காவல்துரையினர் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து சென்றநர். 

போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் மர்ம வெடிபொருட்களுடன் அந்த சொகுசு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, அந்தப் பகுதியில் போலீசாரின் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஷம்புராஜ் தேசாய், செய்தியாளர்களிடம் பேசிய போது இதை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suspected explosives found outsidemukesh ambani house


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal