ஊழல் வழக்கில் நேரடி சாட்சியம் தேவையில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Seithipunal
Seithipunal


லஞ்சம் கொடுப்பவர்களின் சாட்சியங்கள் அரசு ஊழியர்களை தண்டிக்க தேவையில்லை, அவர்கள் மற்ற சாட்சியங்களின் அடிப்படையிலோ அல்லது சூழ்நிலை வகைகளின் அடிப்படையிலோ தண்டிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவை, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வு, லஞ்ச வழக்கில் சிக்கிய ஊழியரை தண்டிக்க நேரடி சாட்சியம் அவசியமா? என்பது குறித்த தீர்ப்பை நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

அதில் ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதற்கு, புகார்தாரர்களும் அரசுத் தரப்பும் நேர்மையான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என நம்புகிறோம். இதனால் நிர்வாகமும் மாசு இல்லாததாகவும், ஊழலற்றதாகவும் மாறும்.

புகார்தாரர் விரோதமாக மாறினால், அல்லது இறந்துவிட்டாலோ அல்லது விசாரணையின் போது அவரது சாட்சியத்தை சமர்ப்பிக்கக் கிடைக்காவிட்டாலோ குற்றம் சாட்டப்பட்ட பொது ஊழியரை விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியாது.

லஞ்சம் கேட்டது தொடர்பாகவோ, லஞ்சம் பெற்றது தொடர்பாகவோ வேறு சாட்சியங்களோ, சந்தர்ப்ப சாட்சியங்களோ இருந்தால் அவை குற்றத்தை நிருபிக்க போதுமானவையாக இருக்கும்பட்சத்தில் பொது ஊழியர் தண்டிக்கப்படலாம் என்றும், நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court ruling that direct testimony is not required in corruption cases


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->