ECI-க்கு எதிரான வழக்கு.. அவசரமாக விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் தெளிவான வாக்குகள் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்திற்குள் வாக்கு சதவீதத்தின் தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என உத்தரவிடக்கோரிய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதியளித்துள்ளார்.

வாக்கு சதவீதங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் உள்ளிட்டவை வாக்காளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஏடிஆர் அமைப்பு தாக்கல் செய்த தனது மனுவில் தெரிவித்துள்ளது.

வாக்கு சதவீதங்களுக்கு இடையே வாக்குப்பதிவின் போது ஒவ்வொரு 2 மணி நேரங்களுக்கு ஒரு முறை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படக்கூடிய வாக்கு சதவீத நிலவரங்களுக்கும் தேர்தல் நிறைவடைந்த உடன் வெளியிடப்படும் வாக்கு சதவீத தரவுகளுக்கும் இடையே 5% மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு இன்று விசாரிக்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court enquired case against ECI


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->