'துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி எனக்குத்தான்; சுதர்சன் ரெட்டி பேட்டி..!
Sudarshan Reddy says victory in the Vice Presidential election is mine
நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல் நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வி நிலவியது.
இதை அடுத்து, மத்தியில் ஆளும் பாஜ கூட்டணி சார்பில் பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தலைவர் நட்டா ஆகியோர் இணைந்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் முன்மொழிந்து, அவர் ஏகமனதாக துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி வேட்பாளராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், வரும் எதிர்வரும் செப்டம்பர் 09-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த துணை ஜனாதிபதி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி என்று இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். கவுகாத்தியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் நான் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி. நான் எங்கே சென்றாலும் அங்கு எனக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற வேட்பாளரை பற்றி கருத்துக் கூறுவது முறையற்றது. அவர் (ஆளும்கட்சி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்) மிகவும் மரியாதைக்குரிய நபரும் கூட என்று பி. சுதர்சன் ரெட்டி பேட்டியளித்துள்ளார்.
English Summary
Sudarshan Reddy says victory in the Vice Presidential election is mine