இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 25 மானியம்.. ஜார்கண்ட் முதலமைச்சர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 84 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், ஜார்கண்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 250 மானியம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் ஆதரவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 ரூபாய் வீதம் மாதம் தோறும் 10 லிட்டர் பெட்ரோலுக்கு 250 மானியம் வழங்கப்படும். 

இந்த தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மானிய உதவியை பெறுவதற்கு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட மொபைல் ஆப்-இல் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை 1.04 லட்சம் விண்ணப்பங்களில் 73 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

subsidy of 25 rupees per litter of petrol in jharkhand


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->