தேர்வில் பெயில் போட்ட ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள கோபிகந்தர் கிராமத்தில் பழங்குடியினருக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.

இந்த தேர்வில் 11 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கணித ஆசிரியர் சுமன்குமார் மற்றும் பள்ளி அலுவலர் சோனேராம் சவுரே ஆகிய இருவரையும் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கினர். அவர்களுடன் சேர்ந்து மற்ற மாணவர்களும் அவர்களைத் தாக்கியுள்ளனர்.

முதலில் கட்டி வைத்து தாக்கியுள்ள மாணவர்கள், பின்னர் இதனை வீடியோவாக எடுத்து அவர்களே சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். வீடியோவில் மாணவர்கள் சிலர் உருட்டுக் கட்டைகளை கைகளில் வைத்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students Attack teachers in jharkhand


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->