காதலை ஏற்க மறுத்த ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாணவன் - ம.பியில் சோகம்.!!
student fire to teacher body in madhya pradesh
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆசிரியை ஒருவரை ஒருதலையாக காதலித்த மாணவன், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நரசிங்கபூர் மாவட்டம் கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை மீது அந்த மாணவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவர் ஆசிரியையிடம், தங்களை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த ஆசிரியை அந்த மாணவன் மீது புகார் அளித்ததனால் மாணவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு, மற்றொரு பள்ளியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, அந்த ஆசிரியை பள்ளிக்கு சேலை அணிந்து சென்றபோது, அந்த மாணவன் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அந்த மாணவன், பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு நேராக அந்த ஆசிரியை வீட்டிற்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பித்து ஓடியுள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து சிட்டு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதி செய்து அந்த மாணவனை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
student fire to teacher body in madhya pradesh