தெற்கு ரெயில்வேயின் அதிரடி உத்தரவு...! படிக்கட்டில் பயணித்தால் அபராதம்...! - Seithipunal
Seithipunal


நாள் தோறும் 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள், தெற்கு ரெயில்வே சேவையின் கீழ், பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, சென்னை கோட்டத்தில் மின்சார ரெயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இதன் நடுவே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நீண்ட தூரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது.

இதுபோன்று இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர். அச்சமயங்களில், எதிர்பாராதவிதமாக இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.

இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே காவலர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால்தான்,தெற்கு ரெயில்வே அதிகாரிகள், ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இது படிக்கட்டில் உற்கார்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Southern Railway drastic order Fine for travelling on stairs


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->