'ஜூலை 20 வரை எப்படியாவது உயிரோடு இருப்பேன்; இல்லை பேயாக திரும்பி வருவேன்'; 20 நாட்களாக உண்ணாவிரதத்தைத் தொடரும் சோனம் வாங்சுக்..! - Seithipunal
Seithipunal


நீட் (NEET) தேர்வு முறைகேடு புகார்கள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மற்றும் லடாக்கிற்கு பழங்குடி மாநில அந்தஸ்து மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணைப் பாதுகாப்பை வலியுறுத்தியும் தொடர்ந்து 20-வது நாளாக சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் டெல்லியில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.

தற்போது வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், பல்வேறு தரப்பினரும் அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மனு மீதான விசாரணையில் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை அரசு மருத்துவர்கள் தினசரி கண்காணிக்க வேண்டும் என்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது. ஆனாலும், அவர் தனது உண்ணாவிரதத்தைக் இன்னும் கைவிடவில்லை.

இதற்கிடையே தனது ஆதரவாளர்களிடையே பேசிய சோனம் வாங்க்சு கூறியதாவது;

வரும் ஜூலை 20-ஆம் தேதி, உங்கள் அனைவருடனும் சேர்ந்து நாடாளுமன்றத்திற்குப் பேரணி செல்வதற்காக அன்றுவரை நான் எப்படியாவது உயிரோடு இருப்பேன் என்றும், ஜூலை 20 அன்று நமது பேரணி வெற்றி பெறவில்லை என்றால், 'நான் ஒரு பேயாகத் திரும்பி வருவேன்'. நான் வெளித்தோற்றத்தில் பலவீனமானவன், ஆனால் உள்ளுக்குள் மிகவும் வலிமையானவன். உங்கள் அனைவருமே உள்ளுக்குள்ளும் வெளியிலும் வலிமையானவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்' என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அத்துடன், ஜூலை 20 அன்று, நாம் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான பேரணி நடத்தவிருப்பதால், இந்த ஆற்றல் நமக்குத் தேவைப்படுகிறது என்றும், நாம் அனைவரும் ஒன்றாகச் சென்று, ஜனநாயகத்தின் கோவிலில் நமது கோரிக்கையை முன்வைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் பதவி விலகவேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வருகிறது. இன்றுடன் 28 நாட்களை எட்டியுள்ளது. ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் எனக் கருதப்படும் நிலையில், அன்றைய நாளில், இப்போராட்டக் குழுவினர் நாடாளுமன்றத்திற்கு பேரணியாகச் செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sonam Wangchuk has been on a hunger strike for 20 days hoping to somehow stay alive until July 20th


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->